உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

Published On 2023-08-09 09:18 GMT   |   Update On 2023-08-09 09:18 GMT
  • உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
  • நிகழ்ச்சியில் அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

செங்கோட்டை:

செங்கோட்டை நகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய நகர் நல மையத்தில் செங்கோட்டை ரோட்டரி கிளப் சார்பில் உலக தாய்ப்பால் வார விழாவை முன்னிட்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை ரோட்டரி கிளப் தலைவா் பால்ராஜ் தலைமை தாங்கினார். செயலர் சீதாராமன் முன்னிலை வகித்தார். அரசு நகர்புறம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் டாக்டர் ராஜகோபால் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட மரம் வளா்ப்பு சேவை பிரிவு மாவட்ட தலைவா் ராஜகுலசேகர பாண்டியன் கர்ப்பிணி பெண்களுக்கு ஆப்பிள், ஆரஞ்ச், உலர்திராட்சை, பிஸ்தா, பாதாம்பருப்பு, சத்துமாவு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி வாழ்த்தி பேசினார். ஊட்டச்சத்து பெட்டகத்திற்கான நிதிஉதவியை சங்கத்தின் குடும்ப தலைவா் சதீஷ் என்ற லெட்சுமணன் செய்திருந்தார். நிகழ்ச்சியில் பட்டயத்தலைவா் எம்.எஸ்.சரவணன், முன்னாள் தலைவா் திருமலைக்குமார், முன்னாள் செயலா் அபுஅண்ணாவி, உறுப்பினா் தேன்ராஜ் காதர்மைதீன், செவிலியா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News