உள்ளூர் செய்திகள்

மாமல்லபுரம், கோவளம் கடல் பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் தடுப்பு ஒத்திகை

Published On 2023-06-29 09:40 GMT   |   Update On 2023-06-29 09:40 GMT
  • ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.
  • கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.

மாமல்லபுரம்:

பயங்கரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் நடவடிக்கையாக 'சாகர் கவாச்-2023' என்ற பெயரில் பாதுகாப்பு ஒத்திகை இன்று காலை தமிழ்நாடு கடலோர பகுதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் தொடங்கியது.

இதில் கடலோர பாதுகாப்பு படையினர் மற்றும் தமிழ்நாடு போலீசார் ஈடுபட்டனர். இந்த ஒத்திகை நாளை மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.

கடல் வழி, சாலை வழியாக மத்திய கடலோர காவல் படை வீரர்கள் பயங்கரவாதிகள் போன்று மாறு வேடத்தில், கையில் டம்மி வெடிகுண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்களுடன் ஊடுருவும் போலீசாரை கண்காணித்து அவர்களை பிடிப்பதே இந்த ஒத்திகை ஆகும்.

பயங்கரவாதிகள் தடுப்பு ஒத்திகையையொட்டி கோவளம், மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கூவத்தூர் பகுதி கிழக்கு கடற்கரை சாலையில் போலீசாரின் வாகன சோதனை இன்று அதிகாலை தொடங்கி நடைபெற்றது.

தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தின் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் மீனவர்கள் உதவியுடன் கடலுக்குள் சென்று புதிய படகுகளோ, புதிய மர்மநபர்கள் எவரேனும் வருகிறார்களா? என்று கல்பாக்கம், மாமல்லபுரம், கோவளம் கடல் வழி சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News