உள்ளூர் செய்திகள்

வாசுதேவநல்லூரில் மருத்துவ முகாம்

Published On 2023-10-01 08:46 GMT   |   Update On 2023-10-01 08:46 GMT
  • தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் மருத்துவ முகாம் நடந்தது.
  • முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நெல்லை:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தில் உள்ள இயற்கை மருத்துவம் மற்றும் யோக அறிவியல் ஆராய்ச்சி மையம் மற்றும் தேசிய இயற்கை மருத்துவ மையம் சார்பில் மருத்துவ முகாம், வாசுதேவநல்லூர் சமுதாய நலக்கூடத்தில் நடந்தது. முகாமை எஸ்.தங்கப்பழம் கல்வி குழுமத்தின் நிறுவனர் எஸ்.தங்கப்பழம், தாளாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். டாக்டர்கள் ரத்தின பிரகாஷ், வேதியப்பன், பிரியங்கா மற்றும் மருத்துவ மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை மருத்துவம், நோய் வராமல் தடுக்கும் வழிகள், வாழ்வி யல் முறைகள், உணவு பழக்கங்கள் குறித்து உரையாற்றினர்.

முகாமில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டது. ரத்த அழுத்தம், உடல் எடை, உயரம், சர்க்கரை பரிசோ தனை நடைபெற்றது. இயற்கை மருத்துவ சிகிச்சை களான அக்குபஞ்சர், அக்குபிரசர், நீர் சிகிச்சை, மசாஜ், யோகா பயிற்சி, பிசியோதெரபி சிகிச்சைகள் வழங்கப்பட்டது. முகாமில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் இயக்கை உணவு, ஹெர்பல் டீ வழங்கப்பட்டது. ஏற்பாடு களை இயற்கை மருத்துவம், யோகா மருத்துவ ஆராய்ச்சி மைய ஆசிரியர்கள், எஸ்.தங்கப்பழம் கல்வி குழும அலுவலர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News