உள்ளூர் செய்திகள்

கரூர் ஜவகர்பஜாரில் குவிந்த பொதுமக்கள்

Published On 2022-10-17 10:05 GMT   |   Update On 2022-10-17 10:05 GMT
  • கரூர் ஜவகர்பஜாரில் பொதுமக்கள் குவிந்தனர்.
  • தீபாவளி பண்டிகையையொட்டி புத்தாடைகள் வாங்க

கரூர்

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் புத்தாடைகள் அணிந்து, பட்டாசுகளை வெடித்து, இனிப்பு பலகாரங்கள் செய்து தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். தீபாவளி பண்டிகையையொட்டி புதிய ஆடைகள், நகைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதனால் கரூர் கடைவீதிகள் அனைத்தும் களைகட்டி வருகின்றன. ஆடைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக கரூர் கடைவீதிகளுக்கு வந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று காலை முதலே கரூர் ஜவகர்பஜார், கோவைரோடு உள்ளிட்ட கடைவீதிகளுக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கினர். பின்னர் மாலை நேரத்தில் அதிகளவில் கூட்டம் காணப்பட்டது. குறிப்பாக ஜவுளி கடைகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

ஜவகர்பஜார் கடைவீதிக்கு இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள், தங்களது வாகனங்களை திருவள்ளுவர் மைதானத்தில் நிறுத்தி வைத்தனர். ஜவகர்பஜார் பகுதியில் கூட்டம் அளகளவில் இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்."

Tags:    

Similar News