உள்ளூர் செய்திகள்

சென்னையில் கடும் பனிப்பொழிவு- வாகன ஓட்டிகள் அவதி

Published On 2022-12-22 08:00 GMT   |   Update On 2022-12-22 08:00 GMT
  • தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.
  • எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

சென்னை:

சென்னையில் இன்று அதிகாலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. வழக்கமாக கார்த்திகை, மார்கழி மாதங்களில் பனிப்பொழிவு அதிகமாகதான் இருக்கும்.

அந்த வகையில் தமிழகம் முழுவதும் மார்கழி மாதம் தொடங்கியதில் இருந்தே பனிப்பொழிவு அதிகமாக இருந்து வருகிறது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் பனி மூட்டம் காணப்படுகிறது.

கோயம்பேடு, மதுரவாயல், பூந்தமல்லி, தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் விமான நிலையம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், நீலாங்கரை, திருவொற்றியூர், மாதவரம், புழல், அம்பத்தூர், ஆவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் இன்று காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டது.

எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர்.

Tags:    

Similar News