உள்ளூர் செய்திகள்

சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்: டி.ஆர். பாலு கவனஈர்ப்பு தீர்மானம்

Published On 2023-12-05 10:46 IST   |   Update On 2023-12-05 10:46:00 IST
  • மீட்புப்பணிகள் போர்க்காள அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
  • கனமழை பாதிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார்.

மிச்சாங் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் நான்கு மாவட்டங்களும் பலத்த பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மீட்புப்பணிகள் போர்க்காள அடிப்படையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பாராளுமன்றத்தில் சென்னை கனமழை பாதிப்பு தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். 

அதேபோல் காங்கிரஸ் எம்.பி. மாணிக் தாகூர் சென்னை பாதிப்பு குறித்து விவாதிக்க கவன ஈர்ப்பு தீர்மானம் வழங்கியுள்ளார். மாணிக் தாகூர், சென்னை விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், மிச்சாங் போன்ற கடும் புயல் போன்ற இயற்கை பேரிடரை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பதையும் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

Similar News