உள்ளூர் செய்திகள்

தருமபுரம் ஆதீனம் மேற்கு கோபுர வாசலை திறந்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

40 ஆண்டுகளுக்கு பிறகு சட்டைநாதர் கோவில் மேற்கு கோபுரவாசல் திறப்பு

Published On 2023-05-18 15:34 IST   |   Update On 2023-05-18 15:34:00 IST
  • மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.
  • வாசல் திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை உள்ளே சென்றன.

சீர்காழி:

சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட சட்டை நாதர் சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் 24ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை ஒட்டி திருப்பணிகள் செய்து நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில் சட்டை நாதர் சுவாமி கோவிலில் உள்ள நான்கு கோபுர வாசல் வழிகளில் மேற்கு கோபுர வாசல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பூட்டிய வைக்கப்பட்டு இருந்தது.

மற்ற கோபுர வாசல்கள் வழியாக மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு வந்து சாமியை தரிசனம் செய்து வந்தனர்.

இந்நிலையில் இன்று மேற்கு கோபுர வாசலை திறக்க தருமபுரம் ஆதீனம் முடிவு செய்து அதற்கான பூர்வாங்க பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

முன்னதாக பசு, யானை, ஒட்டகம், குதிரை ஆகியவைகளும் ஊர்வலமாக வந்தது. தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மேற்கு கோபுர வாசலை வந்தடைந்து சிறப்பு பூஜைகள் செய்தார்.

தொடர்ந்து புனித நீர் தெளிக்கப்பட்டு மேற்கு கோபுர வாசல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட உடன் முதலாவதாக பசு, குதிரை, ஒட்டகம், யானை ஆகியவை அதன் வழியே உள்ளே சென்றன.

அதன் பின்னர் மேள, தாளங்கள் முழங்க தருமபுரம் ஆதீனம், பக்தர்கள் மேற்கு கோபுர வாசல் வழியாக உள்ளே சென்றனர்.

40 ஆண்டுகளாக பூட்டி வைக்கப்பட்டி ருந்த மேற்கு கோபுர வாசல் தற்போது பக்தர்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக திறக்கப்ப ட்டுள்ளது.

இதில் தம்பி ரான் சுவாமிகள் மற்றும் கோயில் காசாளர் செந்தில், தமிழ் சங்கத் தலைவர் மார்கோனி, துணைத்தலைவர் கோவி.நடராஜன், உபயதாரர் முரளிதரன், வர்த்த த சங்க செயலாளர் துரை, திருமு ல்லை வாசல் கணேஷ், ரவிச்சந்தி ரன், பொறியாளர் செல்வ குமார், முன்னா ள் நகர் மன்ற உறுப்பினர் பந்தல் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News