உள்ளூர் செய்திகள்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் 30 கிராம பகுதிகள் இணைப்பு

Published On 2023-07-18 07:03 GMT   |   Update On 2023-07-18 07:03 GMT
  • பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.
  • ஊராட்சிகளில் தீர்மானம் நிறைவேற்ற சிறப்பு கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு மாவட்டத்தின் பெரும்பான்மை பகுதிகள், குடியிருப்பு பகுதிகளாக விரிவடைந்து வளர்ச்சி அடைந்து வருகின்றன.

இத்தகைய வளர்ச்சியை முறைப்படுத்தி ஒழுங்கமைக்க, டி.டி.சி.பி. எனும் உள்ளூர் திட்டக் குழும நிர்வாகத்தின் கீழ் உள்ள 30 ஊராட்சிகளை, சி.எம்.டி.ஏ. எனும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்துடன் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர் ஆகிய இடங்களில் நகர்ப்புற மையங்களை உருவாக்கி அவற்றை சுற்றியுள்ள பகுதிகளை துணை நகரங்களாக மேம்படுத்த சி.எம்.டி.ஏ. முடிவு செய்தது.

இது தொடர்பான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கி வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை 2022-ல் அரசாணை வெளியிட்டது.

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு புதிய நகர மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 20 ஊராட்சிகளும், திருக்கழுக் குன்றம் ஊராட்சி ஒன்றி யத்தில் 8 ஊராட்சிகளும், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளும் என 30 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.

Tags:    

Similar News