உள்ளூர் செய்திகள்
கதிர்காமம் இந்திராகாந்தி கலை, அறிவியல் கல்லூரி பேராசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்து பணிய

கோரிக்கை அட்டையுடன் பேராசிரியர்கள் போராட்டம்

Published On 2022-02-21 13:58 IST   |   Update On 2022-02-21 13:58:00 IST
இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரியில் கோரிக்கை அட்டையுடன் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

உயர்கல்வி குழுமத்தின் கீழ் அரசின் முழு நிதியுதவியோடு புதுவையில் 4 கலை, அறிவியல் கல்லூரிகளும், காரைக்காலில் ஒரு கல்லூரியும் நடத்தப்பட்டு வருகிறது.

இங்கு 4  ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியாற்றும் பேராசிரியர்களுக்கு 15 ஆண்டாக எந்த பதவி உயர்வும்  வழங்கவில்லை. மாத சம்பளமும் தாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. 

வீட்டு வாடகைப்படி, பஞ்சப்படி உட்பட இதர படிகள் அரசு  ஊழியர்களுக்கு இணையாக கடந்த 6 ஆண்டாக வழங்கவில்லை. 

பல முறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை. இதனால் நிதித்துறை செயலர், அதிகாரிகளை கண்டித்தும், சம்பளம், பதவி உயர்வு, 7-வது சம்பளக்குழு நிலுவைத் தொகை உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மாணவர்களின் வகுப்புகள், தேர்வுகள் பாதிக்காத வகையில் போராட்டத்தை தொடங்கினர்.  

அனைத்து கல்லூரிகளிலும் வாயிற்கூட்டம் நடத்தி, கருப்பு பேட்ஜ் அணிந்து வகுப்புகளை நடத்தி வந்தனர். 

இந்நிலையில் கருப்புபேட்ஜ், கோரிக்கை அட்டை அணிந்து வகுப்புகளை நடத்தும் போராட்டத்தை தொடங்கினர். 24-ந் தேதி  உயர்கல்வி குழும தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவும். 25-ந் தேதி மாலை 6 மணி முதல் கோரிக்கை நிறைவேறும்வரை  காலவரையற்ற உண்ணா விரத போராட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப் பட்டுள்ளது என ஆசிரியர் சங்க தலைவர் ராம்குமார் தெரிவித்துள்ளார்.

Similar News