உள்ளூர் செய்திகள்
சண்டே மார்க்கெட்டில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள காட்சி.

சண்டே மார்க்கெட்டில் குடிநீர் வசதி

Published On 2022-02-21 09:27 IST   |   Update On 2022-02-21 09:27:00 IST
சண்டே மார்க்கெட்டில் ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் குடிநீர் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

சண்டே மார்க்கெட்டிற்கு வரும் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஏ.ஐ.டி.யூ.சி. சண்டே மார்க்கெட் வியாபார தொழிலாளர் சங்கம் சார்பில் முதற்கட்டமாக  காந்தி வீதியில் 6 மையங்களில் கேன் மூலம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

சண்டே மார்க்கெட் சங்க கவுரவ தலைவர் துரை.செல்வம், தலைவர் பாபு, செயலாளர் கார்த்திக், துணைத் தலைவர்கள்  முகமது இக்பால், பிரகாஷ், டோனி, முகமது அலி, சங்கர், துணைச் செயலாளர்கள் சரவணன்,  சிலம்பரசன்,  நாகராஜ், பழனிவேல், அருள்ராஜ் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Similar News