உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் 33 பேருக்கு கொரோனா
புதுவையில் 33 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் 19-ந் தேதி 1672 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 33 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதுவையில் 17 பேரும், காரைக்காலில் 9 பேரும், ஏனாமில் 4 பேரும், மாகியில் 3 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிப்மர் மருத்துவமனையில் 3 பேர், அரசு மருத்துவமனையில் ஒருவர், அரசு மார்பக மருத்துவமனையில் 5 பேர், கோவிட் கேர் சென்டர்களில் 6 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தற்போது மருத்துவ மனைகளில் 20 பேர், வீட்டு தனிமையில் 399 பேர் என ஒட்டுமொத்தமாக 410 பேர் சிகிச்சையில உள்ளனர். இன்று ஒரு நாளில் 108 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 65 ஆயிரத்து 507 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 218 பேர் குணமடைந்துள்ளனர்.
புதுவை அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த புதுவை மகாத்மாகாந்தி நகரை சேர்ந்த 69 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1960 ஆக உயர்ந்துள்ளது.
புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பிறகு கொரோனா பாதிப்பு அதிகமாக காணப்பட்டது. தினமும் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. இது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.