உள்ளூர் செய்திகள்
நேரு எம்.எல்.ஏ. ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை இயக்குனர் மாணிக்க தீபனை சந்தித்து ஆலோசனை நடத்திய காட்சி.

பெரிய மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-02-18 09:33 GMT   |   Update On 2022-02-18 09:33 GMT
புதிய பஸ் நிலையம், பெரிய மார்க்கெட்டில் கண்காணிப்பு கேமரா அமைக்க வேண்டும் என நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:

உருளையன்பேட்டை தொகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து நேரு எம்.எல்.ஏ. ஸ்மார்ட் சிட்டி திட்ட துணை இயக்குனர் மாணிக்க தீபனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். 

அப்போது, சின்ன வாய்க்காலை  மேம்படுத்துதல், அரசு குடியிருப்புகளை மேம்படுத்துதல், குடிநீர் குழாய்களை  புதிதாக மாற்றுதல், மின் பற்றாக்குறையை போக்குதல், பாதாள சாக்கடைகளை தரம் உயர்த்துதல்,  முக்கிய வீதிகளை சிமெண்டு சாலைகளாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் நகரின் மைய  பகுதியில் உள்ள புதிய பஸ் நிலையத்தை மேம்படுத்தி கண்காணிப்பு கேமராக்கள் அமைத்தல், பெரிய மார்க்கெட் பகுதியில் உள்ள கடைகளை மேம்படுத்தி சிதிலமடைந்த நடைபாதைகளை  புதுப்பித்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஆலோசனையின்  போது ஸ்மார்ட் சிட்டி திட்ட தொழில்நுட்ப அதிகாரிகள்  மாணிக்கவாசகம், முரளி, நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம்,  இளநிலை பொறியாளர் ஞானசேகரன். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News