உள்ளூர் செய்திகள்
தீ விபத்தில் வீடுகள் எரிந்து நாசமாகி இருப்பதை காணலாம்

காரைக்கால் அருகே திருபட்டினத்தில் தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து நாசம்

Published On 2022-02-17 15:37 IST   |   Update On 2022-02-17 15:37:00 IST
காரைக்கால் அருகே திருபட்டினத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது
காரைக்கால்:

காரைக்கால் அருகே திருபட்டினம் கீழையூர் பகுதியில் வசிப்பவர்கள் வீரமணி, ஸ்டாலின், தமிழரசன்.

நேற்று மாலை மாசிமகத் திருவிழா முடிந்து, அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை 2 மணி சுமாருக்கு தமிழரசன் என்பவர் வீட்டில் தீ பற்றியது. சிறுது நேரத்தில் தொடர்ந்து அடுத்தடுத்தவர்களின் வீட்டுக்கும் தீ பரவியது. விபத்தை தொடர்ந்து அனைவரும் வீட்டை விட்டு உடனடியாக வெளியேறினார். நள்ளிரவு என்பதால் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது.

காரைக்கால் மாவட்ட தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீ மற்ற வீடுகளுக்கு பரவாமல் அணைத்தனர். விபத்தில் சுமார் ரூ. 5 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து மின் கசிவு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீ விபத்து குறித்து, திரு.பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News