உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கட்டிட தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல முயற்சி

Published On 2022-02-16 11:44 IST   |   Update On 2022-02-16 11:44:00 IST
மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை தட்டி கேட்ட தகராறில் கட்டிட தொழிலாளியை கல்லால் தாக்கி கொல்ல செய்ய முயற்சி செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை பூமியான்பேட்டை குண்டுசாலை தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (வயது40).  இவரது சகோதரர் ரமேஷ்(வயது40). இருவரும் கட்டிட வேலை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வெங்கட்டா நகரை சேர்ந்த பெயிண்டர் வெற்றிவேல்(27)  என்பவர் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை  ரமேஷ் மற்றும் சுரேஷ் தட்டிக்கேட்டனர். இதில் இவர்களுக்குள் முன்விரோதம் ஏற்பட்டது-.

இதே போல்  ரமேஷ் மற்றும் சுரேஷ் குண்டுசாலை தெருவில் சாலையோரம் அமர்ந்திருந்தனர். அப்போது அந்த வழியாக வெற்றிவேல் மோட்டார் சைக்கிளில் பூமியான்பேட்டையில் உள்ள தனது மனைவியை பார்க்க சென்றார். 

பின்னர் திரும்பி வரும் போது திடீரென அங்கு கிடந்த காண்கீரீட் சிலாப் கல்லை எடுத்து சுரேசின் தலையில் பலமாக தாக்கி னார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயமடைந்து ரத்தம் கொட்டியது. மேலும் அதே கல்லால் ரமேசை தாக்க முயன்றார். அவர் சுதாரித்துக்கொண்டதால் தாக்குதலில் இருந்து தப்பினார்.

பின்னர் வெற்றிவேல் அங்கிருந்து தப்பியோடி விட்டார். சுரேசை அவரது சகோதரர் ரமேஷ் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து ரமேஷ் ரெட்டியார் பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News