உள்ளூர் செய்திகள்
பொக்லைன் எந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட காட்சி.

லாஸ்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Published On 2022-02-15 14:40 IST   |   Update On 2022-02-15 14:40:00 IST
லாஸ்பேட்டையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு கடற்கரை சாலையையும்,  லாஸ்பேட்டை மெயின் ரோடையும் இணைக்கும் வகையில் கொட்டுப்பாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் தெரு உள்ளது.

செல்வ விநாயகர் கோவில் தெரு, லாஸ்பேட்டை மெயின்ரோடு முழுவதும் ஆக்கிரமிப்புகள் நிறைந்த பகுதியாக உள்ளது. லாஸ் பேட்டை மெயின் ரோட்டில் உள்ள கடைகளின் விளம்பர பலகைகள் சாலையில் வைக்கப்பட்டுள்ளது. 

கடைகளையும் சாலையில் வைத்து வியாபாரம் செய்கின்றனர். லாஸ்பேட்டையில் நீதிபதிகள் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் இருந்து நாள்தோறும் நீதிபதிகள் நீதிமன்றத்துக்கு இந்த வழியில் தான் செல்வார்கள். 

கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் ஒரு விபத்தும் நடந்தது. இதை கருத்தில்கொண்டு நீதிபதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து புதுவை போலீஸ் சூப்பிரெண்டு பக்தவச்சலம், பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் வேல்முருகன் மற்றும் அதிகாரிகள் போலீசார் பாதுகாப்போடு ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடங்கியது. விநாயகர் கோவில் வீதியில் வாய்க்காலுக்கு மேல் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த சுவர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கப்பட்டு ஆக்கிர மிப்புகள் அகற்றப்பட்டது. 

லாஸ்பேட்டை மெயின்ரோடு முதல் விமான நிலையம் வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப் படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News