உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

எலி மருந்து தின்று நர்சு தற்கொலை

Published On 2022-02-15 10:15 IST   |   Update On 2022-02-15 10:15:00 IST
வில்லியனூர் அருகே எலி மருந்து தின்று நர்சு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:

வில்லியனூர் அருகே வி.மணவெளி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ரங்கசாமி. இவர் குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி உமா (வயது35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

உமா புதுவை அருகே தமிழக பகுதியான தூக்கனாம்
பாக்கத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணிபுரிந்து வந்தார்.

கடந்த 2 ஆண்டுகளாக உமா ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு அடிக்கடி மயக்கம் ஏற்பட்டு அவதியடைந்து வந்தார். அதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் நோய் குணமாகவில்லை.

இந்த நிலையில் திடீரென வீட்டில் உமா மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி யடைந்த அவரது கணவர் ரங்கசாமி மனைவியை மீட்டு புதுவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு உமாவிடம் விசாரித்த போது ரத்த அழுத்தம் மற்றும் நீரழிவு நோயினால் அவதிப்பட்டு வந்ததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார். 

தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரியில் உமாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப் பட்டது. பின்னர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனும தித்தனர். அங்கு உடல் நிலை மோசமாகவே உமாவை சென்னையில் உள்ள ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பெற்று வந்த உமா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

இதுகுறித்து ரங்கசாமியின் சகோதரர் குணசேகரன் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News