உள்ளூர் செய்திகள்
சுற்றுலாத்துறை அலுவலகத்தில் ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்திய காட்சி.

சம்பளம் வழங்க கோரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தர்ணா

Published On 2022-02-14 14:04 IST   |   Update On 2022-02-14 14:04:00 IST
சம்பளம் வழங்க கோரி புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

புதுவை சுற்றுலா வளர்ச்சி கழக ஊழியர்களுக்கு கடந்த 7 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க கோரி பி.டி.டி.சி. அனைத்து சங்க ஊழியர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடற்கரை சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கழக அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடந்தது. 

ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார். இணை ஒருங்கிணைப்பாளர்கள் கஜபதி, முகுந்தன், ஆதிகணேசன், கந்தன், கலைவாணன் காரைக்கால் பிரிவு அண்ணாதுரை மற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டனர்

Similar News