உள்ளூர் செய்திகள்
காதலர் தின கொண்டாட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்-இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்
காதலர் தின கொண்டாட்டத்துக்கு புதுவை அரசு தடை விதிக்க வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில இந்து மக்கள் கட்சி ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்து மக்கள் கட்சியின் புதுவை மாநில தலைவர் மஞ்சினி தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாநிலம் மற்றும் தொகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வரு மாறு:-
புதுவை மாநிலத்தில் நாயன்மார்கள், ஆழ்வார்கள், சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியின் பண்பாட்டை சீரழிக்கும் வகையில் தொடர்ந்து பிப்ரவரி 14-ந்தேதி காதலர் தினம் என்ற போர்வையில் புதுவை மாநிலம் முழுவதும் கலாச்சாரத்தை சீரழித்து வரும் காதலர் தினத்தை உடனடியாக புதுவை அரசு தடை விதிக்க வேண்டும்.
இது மட்டுமின்றி புனிதம் கெட்டுப்போகும் வகையில் புதுவையை நோக்கி வெளி மாநிலங்களில் இருந்து வரும் ஆண்கள், பெண்கள் மது குடித்து விட்டு அரைகுறை ஆடைகளால் இந்துக்களின் மனம் புண்படும் வகையிலும் உள்ளது.
இதனை கருத்தில் கொண்டு புதுவை அரசும், காவல்துறையும் இரும்புக்கரம் கொண்டு தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.