உள்ளூர் செய்திகள்
ஓ.பன்னீர்செல்வம்

வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்- ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2022-02-12 15:48 IST   |   Update On 2022-02-12 15:48:00 IST
வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மாபெரும் வெற்றியடையும்.

புதுச்சேரி:

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து கும்பகோணத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தை முடித்து கொண்டு நேற்று இரவு புதுவை சன்வே ஓட்டலில் தங்கினார்.

இன்று காலை கடலூரில் அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய அவர் புறப்பட்டார்.

முன்னதாக ஓ.பன்னீர் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. இத்தேர்தலில் அ.தி.மு.க. தனித்து நிற்கிறது. தமிழ் மாநில காங்கிரஸ் எங்களோடு இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாக தி.மு.க. உள்ளது

இத்தேர்தலில் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசு மீது மக்கள் மிகப்பெரும் அதிருப்தியில் உள்ளனர். எனவே அ.தி.மு.க. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 100-க்கு 100 சதவீதம் மாபெரும் வெற்றியடையும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுவையிலிருந்து புறப்பட்ட அவரை கடலூர் முன்னாள் அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் நிர்வாகிகள் அழைத்துச் சென்றனர்.

Similar News