உள்ளூர் செய்திகள்
சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காட்சி.

நினைவு தினம்- சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை

Published On 2022-02-11 14:36 IST   |   Update On 2022-02-11 14:36:00 IST
நினைவு தினத்தையொட்டி சிங்காரவேலர் சிலைக்கு ரங்கசாமி மாலை அணிவித்தார்.
புதுச்சேரி: 

புதுவை அரசு சார்பில் தியாகி சிங்காரவேலர் நினைவு நாள் 11-ந்தேதி அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி புதுவை - கடலூர் சாலையில் உள்ள அவரது  சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம்,  அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.ஜெ.சரவணன்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தி.மு.க. சார்பில் எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எம்.எல்.ஏ. சம்பத், இளைஞரணி அமைப்பாளர் முகமது யூனுஸ், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் கோபால், தொகுதி செயலாளர் சக்திவேல் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

இந்திய கம்யூனிஸ்டு சார்பில் மாநில செயலாளர் சலீம் தலைமையில் முன்னாள் எம்.எல்.ஏ. நாரா கலைநாதன், நிர்வாகிகள் அபிஷேகம், சேதுசெல்வம், கீதநாதன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Similar News