உள்ளூர் செய்திகள்
புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்

பள்ளிகளில் மாணவர்களுக்கு கருப்பட்டி, வேர்க்கடலை, நவதானியம், வாழைப்பழம் வழங்க வேண்டும்- கவர்னர் அறிவுரை

Published On 2022-02-10 14:24 IST   |   Update On 2022-02-10 14:24:00 IST
பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவில் கருப்பட்டி, வேர்க்கடலை, நவதானியம், வாழைப்பழம் வழங்க வேண்டும் என்று புதுவை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கி உள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி துணைநிலை கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரியில் உள்ள பள்ளிக்கூடங்களில் வகுப்பறைகளை கணிணி மயமாக்கி டிஜிட்டல் முறையில் கற்றுக்கொள்வதற்கு வசதியாக மேம்பாடு செய்வதற்கும், பள்ளிகளில் உள்ள கழிப்பறைகளை மேம்படுத்தி, பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

மதிய உணவு திட்டத்தில் நவ தானியங்களையும், கருப்பட்டி, வேர்க்கடலை, வாழைப்பழம் போன்ற சத்தான உணவுகளை சேர்ப்பதற்கும் வேண்டிய முயற்சிகளை செய்து கொடுத்து ஆலோசனையும், அறிவுரையும், வழிகாட்டுதலும் வழங்கினேன்.

புதிய கல்விக்கொள்கைகளின்படி மாணவர்களுக்கு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் அவர்களது உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்தான உணவுகளை வழங்குவதோடு அதை கண்காணிப்பதும் வலியுறுத்தப்படுகிறது.

வருகிற 2023-ம் ஆண்டை நவதானியங்கள் ஆண்டாக உலக உணவு விவசாய அமைப்பு உலக நாடுகளுடன் கொண்டாட இருக்கின்றது. அதை முன்னின்று நடத்துவதற்கு இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறது என்பதையும் இந்நேரத்தில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News