உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

மத கலவரத்தை தூண்ட காங்.-தி.மு.க. முயற்சி-அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Published On 2022-02-10 13:43 IST   |   Update On 2022-02-10 13:43:00 IST
அரசியல் ஆதாயத்துக்காக மத கலவரத்தை தூண்ட காங்.-தி.மு.க. முயற்சிக்கிறது என அ.தி.மு.க. குற்றச்சாட்டியுள்ளது.
புதுச்சேரி:

புதுவை கிழக்கு மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

அரசியல் ஆதாயத்துக்காக புதுவையில் மத கலவரத்தை தூண்டும் முயற்சியில் தி.மு.க.-காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளதை அதிமுக வன்மையாக கண்டிக்கிறது. 

பள்ளியில் சீருடை அணிவது சம்பந்தமான, ஆசிரியரின் சாதாரணமான அறிவுறுத்தலை பூதாகாரமாக்கி மதத்தின் பெயரால் மாணவர்களிடம் பிரிவினையை உருவாக்கும் முயற்சியை திமுக எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் முதல்-அமைச்சர்  நாராயணசாமி இறங்கி யுள்ளது அநாகரிகமான  செயல். 

சமுதாயத்தில் ஒரு சிலரால் சிறு தவறுகள் ஏற்பட்டால், மாநில நலனை கருதாமல் சம்பந்தப்பட்ட மதத்தினரின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் வாய்க்கு வந்தபடி பொய் பேசுவது பொறுப்புள்ள அரசியல் வாதிகளுக்கு அழகல்ல. 

அரியாங்குப்பம் பள்ளியில் பர்தா சம்பந்தமான சாதார ணமான பிரச்சசினையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் முதல்-அமைச்சரை சந்தித்து மனு அளித்து மதரீதியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். 

முதல்&அமைச்சராக இருந்த நாராயண சாமியும், மதவாத  சக்திகள் தலை தூக்கி உள்ளதாக பொறுப்பற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார்.

புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்த திட்டங்களை முழுமையாக செயல்படுத்துகிறது. ஆட்சியில் குறைகூற முடியாமல் திட்டமிட்டு ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்த கல்வி அமைச்சரை மாற்ற வேண்டும் என நாராயணசாமி கோருகிறார். 

மதம், சாதி பெயரால் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தும் சுயநலமிக்க அரசியல் கட்சி தலைவர்களையும், எம்.எல்.ஏ.க்களையும் மத நம்பிக்கை கொண்டவர்கள் சீர் தூக்கி பார்த்து இவர்களின் அற்ப செயல்களை புறந்தள்ள வேண்டும். 

அமைதி தவழும் புதுவையில் திட்டமிட்டு மத கலவரத்தை தூண்டுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கையை காவல்துறை உயரதிகாரிகள் எடுக்க வேண்டும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News