உள்ளூர் செய்திகள்
ஊசுடு ஏரியை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆய்வு செய்த காட்சி.

ஊசுடு ஏரியை அழகுபடுத்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவு

Published On 2022-02-09 14:23 IST   |   Update On 2022-02-09 14:23:00 IST
ஊசுடு ஏரியை அழகுபடுத்த அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுவையின் மிகப்பெரிய ஏரியான ஊசுடு ஏரி சுற்றுலாதலமாகவும் விளங்கி வருகிறது.

ஊசுடு ஏரியை சுற்றிலும் வேலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேலியில் கொடிகள் வளர்ந்து புதராகிஉள்ளது. கரையை ஒட்டி முட்செடிகள் வளர்ந்துள்ளது. கரையை ஒட்டியுள்ள மரங்களின் கிளைகள் ஏரிக்குள் ஊடுருவி உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏரியின் அழகை முழுமையாக ரசிக்க முடியவில்லை என வேளாண்துறை அமைச்சர் தேனீஜெயக்குமாருக்கு புகார் வந்தது. 

இதையடுத்து அமைச்சர் தேனீஜெயக்குமார், அதிகாரிகளோடு  சென்று ஏரியை பார்வையிட்டார். வேலியில் படர்ந்துள்ள கொடி
கள், புதர்களை அகற்ற அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். 

ஏரிக்குள் ஊடுருவியுள்ள மரக்கிளை களையும் வெட்டி சீரமைக்க உத்தரவிட்டார்.  

ஏரியின் முழ அழகும் கரையிலிருந்து பார்த்தால் தெரியும்படி ஏற்பாடு செய்ய உத்தரவிட்டார். அமைச்சருடன் துணை வனக்காப்பாளர் வஞ்சுளவள்ளி, துணை இயக்குனர் குமரவேல், வேளாண் அதிகாரி பிரபாகரன் ஆகியோர் உடனிருந்தனர். 

Similar News