உள்ளூர் செய்திகள்
புதுவையில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகியுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவையில் ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் புதிதாக 190 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. புதுவையில் 154, காரைக்காலில் 26, ஏனாமில் 10 பேர் புதிதாக தொற்றுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
புதுவையில் 62, காரைக்காலில் 18, ஏனாமில் 5, மாகியில் 6 பேர் என 91 பேர் தொற்றுடன் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
புதுவையில் 280, காரைக்காலில் 296, ஏனாமில் 70, மாகியில் 5 பேர் என 651 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர்.
புதுவை மாநிலத்தில் ஒட்டு மொத்தமாக இதுவரை ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 376 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 737 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர்.
புதுவையில் 2 ஆயிரத்து 278, காரைக்காலில் ஆயிரத்து 86, ஏனாமில் 209, மாகியில் 25 பேர் என 3 ஆயிரத்து 598 பேர் வீட்டு தனிமையில் உள்ளனர். புதுவை மாநிலத்தில் இப்போது 3 ஆயிரத்து 689 பேர் கொரோனா தொற்றுடன் உள்ளனர்.
புதுவை கருவடிக்குப்பம் ஜெயராஜ் நகரை சேர்ந்த 60 வயது நபர், ஏனாமை சேர்ந்த 75 வயது மூதாட்டி ஆகியோர் கொரோனா சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் மாநிலத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்து 950 ஆக உஎயர்ந்துள்ளது.
புதுவையில் 2-வது தவணை உட்பட 15 லட்சத்து 43 ஆயிரத்து 584பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.