உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வீச்சரிவாள்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர்கள் கைது

Published On 2022-01-22 07:37 GMT   |   Update On 2022-01-22 07:37 GMT
கிருமாம்பாக்கத்தில் வீச்சரிவாள்களை காட்டி பொதுமக்களை மிரட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

கிருமாம்பாக்கம் சந்திப்பில் வாலிபர்கள் சிலர்  வீச்சரிவாள்களை வைத்து கொண்டு, பொது மக்களை மிரட்டுவதாகவும், இதனால் பொதுமக்கள் அலறியடித்து ஓடுவதாகவும்  கிருமாம்பாக்கம் போலீ சாருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து  போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகா னந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து  சென்றனர்.  

அப்போது போலீசாரை கண்டதும், அந்த வாலிபர்கள் தப்பியோட  முயன்றனர். ஆனால், போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர்.

அவர்களிடமிருந்து மொத்தம் 6 வீச்சரிவாள் களை பறிமுதல் செய்து  போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் குருவிநத்தம் புதுநகரை சேர்ந்த நடராஜன் (வயது 26), பாகூர் பங்களா வீதி ராஜ்குமார் (20),  குருவிநத்தம் பிடாரியம்மன் கோவில்வீதி பிரவின்குமார் (19) என்பது தெரியவந்தது. 

மேலும், விசாரணையில், இவர்கள் புதுவையில் உள்ள முக்கிய ரவுடிகளுடன் தொடர்புடையர்கள் என்பதும், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து உதவியதும் தெரியவந்தது.  

இதுகுறித்து கிருமாம்பாக்கம் போலீசார்  வழக்கு பதிவு செய்து  அவர்களை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News