உள்ளூர் செய்திகள்
ஜிப்மர் டாக்டர் வீட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு- வீடியோ மூலம் போலீசார் விசாரணை
ஜிப்மர் டாக்டர் வீட்டுக்குள் புகுந்து பணம் திருட்டு வீடியோ மூலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகத்தில் டாக்டர்களுக்கு குடியிருப்புகள் உள்ளது.
இதில் குழந்தைகள் அறுவை சிகிச்சை பிரிவின் தலைவர் பிபிக்ஆனந்த் ஜின்டால் வசித்து வருகிறார். இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த பர்சில் இருந்து ரூ.2 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
இதனை கண்ட அவர் வீட்டில் பொருத்தப் பட்டிருந்த சி.சி.டி.வி. கேமிராவை ஆய்வு செய்தார். அப்போது அதிகாலை 1 மணி அளவில் 3 பேர் வீட்டின் கதவை திறப்பதும், அதில் ஒருவர் வீட்டில் உள்ள வரவேற்பறைக்கு சென்று அங்கு மேஜையில் இருந்த டாக்டரின் பர்சில் இருந்து பணம் திருடிச் செல்வதும் பதிவாகி இருந்தது.
இதனையடுத்து டாக்டர் சி.சி.டி.வி. காட்சிகளுடன் கோரிமேடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டில் ஈடுப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோன்று அருகில் உள்ள டாக்டர் வீடுகளிலும் திருட்டு நடைபெற்று உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.