செய்திகள்
நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-03 17:55 IST   |   Update On 2021-11-03 17:55:00 IST
அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கீழப்பழுவூர்:

அரியலூர் மாவட்டம், திருமானூர் பஸ் நிறுத்தம் அருகே விவசாயிகள் மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல் கொள்முதல் நிலையங்களில் முறையாக நெல்லை கொள்முதல் செய்யாததால் அறுவடை செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் அடைந்து வருகின்றன. 

இதனை கருத்தில் கொண்டு நடமாடும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சமூக ஆர்வலர்கள் திருநாவுக்கரசு, பாஸ்கர், தே.மு.தி.க. மாவட்ட துணை செயலாளர் தங்க ஜெயபால், நாம் தமிழர் கட்சி தொகுதி செயலாளர் கப்பல் குமார், விவசாய சங்க மாவட்ட தலைவர் மணியன் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News