செய்திகள்
சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதையொட்டி கூட்ட அரங்கு தயார்படுத்தப்பட்டு வருவதை காணலாம்.

பட்ஜெட் கூட்டத்தொடருக்காக சட்டசபை வளாகம் தயாராகிறது

Published On 2021-08-21 03:29 GMT   |   Update On 2021-08-21 03:29 GMT
சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகத்தை சீர் செய்து கூட்ட அரங்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 26-ந்தேதி தொடங்குகிறது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை சட்டசபை செயலாளர் முனுசாமி வெளியிட்டார்.

புதிய அரசின் முதல் கூட்டமாக இது அமைகிறது. அன்றைய தினம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உரையாற்றுகிறார். அன்று பிற்பகலில் துணை சபாநாயகர் தேர்தல் நடக்கிறது.

வருகிற 27-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக ரூ.10 ஆயிரத்து 100 கோடி மதிப்பில் பட்ஜெட் தயார் செய்யப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஆனால் அதற்கு மத்திய அரசின் அனுமதி இன்னும் கிடைக்கவில்லை. வருகிற 23-ந்தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி டெல்லி சென்று பட்ஜெட்டுக்கு ஒப்புதல் பெறுவார் என்று கூறப்படுகிறது.

சட்டசபை கூடுவதையொட்டி சட்டசபை வளாகத்தை சீர் செய்து கூட்ட அரங்கை தயார் செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இருக்கைகளை தூய்மைப்படுத்துவது, ஒலிபெருக்கிகளை சரிசெய்வது, குளிர்சாதனங்கள் சரிவர இயங்குகிறதா? என்பன போன்ற பணிகளை சட்டசபை ஊழியர்கள் நேற்று மேற்கொண்டனர்.


Tags:    

Similar News