செய்திகள்
காலாப்பட்டில் விபத்து: கணவன்-மனைவி படுகாயம்
புதுவை காலாப்பட்டில் மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் படுகாயமடைந்த தம்பதியினர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை பெரிய காலாப்பட்டு புதுநகரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது42). இவர் சம்பவத்தன்று இரவு தனது 2-வது மனைவி கயல்விழி என்பவருடன் காலாப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்.
காலாப்பட்டு நவோதயா பள்ளி அருகே வந்த போது எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக சிவக்குமார் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட சிவக்குமார் மற்றும் கயல்விழி ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர்.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து சிவக்குமாரின் முதல் மனைவி கல்பனா கொடுத்த புகாரின் பேரில் புதுவை வடக்கு போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.