செய்திகள்
தீவிபத்து (கோப்புப்படம்)

சீர்காழியில் நடமாடும் பழ வாகனத்தில் திடீர் தீ விபத்து

Published On 2021-06-05 15:46 IST   |   Update On 2021-06-05 15:46:00 IST
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நடமாடும் பழ வாகனத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி: 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி உழவர் சந்தை எதிரே மாதிரவேளூர் கிராமத்தை சேர்ந்த நெப்போலியன் என்பவருக்கு சொந்தமான ஆம்னி வேனில் சீர்காழி நகராட்சியில் பழங்கள் விற்பதற்காக அனுமதி பெற்று பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் நேற்று காலை விற்பனை செய்து வந்த ஆம்னி வேனில் பேட்டரி பகுதியில் தீப்பிடித்து வேன் எரியத்தொடங்கியது. உடனடியாக பழங்களை அப்புறப்படுத்திய விற்பனையாளர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News