செய்திகள்
கடைக்கு சீல்

தக்கோலத்தில் விதிகளை மீறிய நகை கடைக்கு சீல்

Published On 2021-05-15 17:28 IST   |   Update On 2021-05-15 17:28:00 IST
நகை கடையின் ஷட்டரை மூடியபடி, உள்ளே வியாபாரம் செய்து கொண்டிருப்பதை கண்ட பேரூராட்சி அதிகாரிகள் நகை கடைக்காரரை எச்சரித்து, கடைக்கு சீல் வைத்தனர்.
அரக்கோணம்:

தக்கோலம் பேரூராட்சியில் அரசு அறிவித்த ஊரடங்கு விதிமுறை கடைபிடிக்கப்படுகிறதா என பேரூராட்சி அதிகாரிகள் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறைகளை மீறி, நகை கடையின் ஷட்டரை மூடியபடி, உள்ளே வியாபாரம் செய்து கொண்டிருப்பதை கண்ட பேரூராட்சி அதிகாரிகள் நகை கடைக்காரரை எச்சரித்து, கடைக்கு சீல் வைத்தனர்.

Similar News