செய்திகள்
சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.

வெம்பக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் அவதி

Published On 2021-04-18 12:00 GMT   |   Update On 2021-04-18 12:00 GMT
வெம்பக்கோட்டை பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் சாலையில் தேங்காதவாறு வடிய வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாயில்பட்டி:

வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக சாரல் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தாயில்பட்டி அருகே உள்ள இறவார்பட்டி கிராமத்தில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோடு சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்த சாரல் மழையால் தார்ச்சாலை சேதமடைந்து விட்டது.

இதனால் சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

பள்ளம் இருப்பது தெரியாமல் வாகனங்களில் வருபவர்கள் தவறி கீழே விழுந்து விடுகின்றனர். இதனால் வாகன ஓட்டிகளும், அந்த வழியாக செல்பவர்களும் பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.

எனவே உடனடியாக சேதமடைந்த சாலையை சீரமைக்கவும், மழைநீர் சாலையில் தேங்காதவாறு வடிய வைக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News