செய்திகள்
சாத்தூரில் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

சாத்தூரில் முக கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம்

Published On 2021-04-10 23:41 GMT   |   Update On 2021-04-10 23:41 GMT
தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது.
சாத்தூர்:

தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பினை வெளியிட்டது.

அதேபோல பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. அதில் ஒன்றாக கண்டிப்பாக அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என்று கூறியுள்ளது. சாத்தூர் டவுன் மற்றும் முக்கிய சாலை சந்திப்புகளில் முக கவசம் இல்லாமல் யாரும் வருகிறார்களா என போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த பணியில் சாத்தூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைப்பாண்டி, சப்-இன்ஸ்பெக்டர்கள் செய்யது இப்ராகிம், பாக்கியராஜ், கிருஷ்ணசாமி, மற்றும் போலீசார் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக முக கவசம் அணியாமல் வந்த 250 பேருக்கு ரூ.200 அபராதம் விதித்தனர்.

அத்துடன் கொரோனா பரவலை தடுக்க அனைவரும் அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News