செய்திகள்
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துபட்டி கிராமத்தில் காட்டு பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.

ஏழாயிரம் பண்ணை அருகே காட்டில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு

Published On 2021-04-10 19:01 IST   |   Update On 2021-04-10 19:01:00 IST
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மடத்துபட்டி கிராமத்தில் காட்டு பகுதியில் பிடித்த தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
தாயில்பட்டி:

ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ராமநாதபுரம் என்ற மடத்துபட்டி பகுதியில் ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டுள்ளனர்.

பருத்தி அறுவடைக்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில் திடீரென காட்டு பகுதியில் தீப்பிடித்தது. இந்த தீ வேகமாக பரவ தொடங்கியது. இதுகுறித்து விவசாயிகள், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்க போராடினர்.

3 மணி நேரத்திற்கு பிறகு போராடி தீயை அணைத்தனர். இதனால் பருத்தி செடியில் தீப்பிடிப்பது தவிர்க்கப்பட்டது. தீயில் இருந்து பருத்தியை காப்பாற்றிய தீயணைப்பு நிலைய அலுவலர்களுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்தனர்.

அதேபோல சத்திரம் கிராமத்தில் காட்டுப்பகுதியில் புல்லில் பிடித்த தீ வேகமாக பரவுவதாக வெம்பக் கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதன் அருகே தான் பட்டாசு ஆலைகள் உள்ளன. விரைவாக தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Similar News