செய்திகள்
சாத்தூர் - சிவகாசி விலக்கு வழியாக சாத்தூர் நகருக்குள் வரும் வாகனங்களில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்க நடவடிக்கை - சாத்தூர் பகுதியில் வாகன சோதனை தீவிரம்

Published On 2021-03-31 15:01 IST   |   Update On 2021-03-31 15:01:00 IST
சாத்தூர் - சிவகாசி விலக்கு வழியாக சாத்தூர் நகருக்குள் வரும் வாகனங்களில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
சாத்தூர்:

பணப்பட்டு வாடாவை தடுக்க சாத்தூர் பகுதியில் வாகன சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சாத்தூரில் தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் அனைவரும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கடைப்பிடிக்கும் வகையில் தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளான சாத்தூர்-சிவகாசி விலக்கு, சாத்தூர்-கோவில்பட்டி நான்குவழிச்சாலை, சாத்தூர்-இருக்கன்குடி சாலை, ஏழாயிரம்பண்ணை சாலை, தாயில்பட்டி சாலை உள்ளிட்ட போக்குவரத்து அதிகமான பகுதிகள் மற்றும் நகருக்குள் வாகனங்கள் வரும் சந்திப்புகள் ஆகிய அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பறக்கும் படையினர் 3 குழுக்களாக பிரிந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தேர்தல் பறக்கும் படை கண்காணிப்பாளர் வட்டார புள்ளியியல் ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சந்தான முத்து மற்றும் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கொண்ட பறக்கும் படை குழுவைச்சேர்ந்தவர்கள் சாத்தூர்-சிவகாசி விலக்கு வழியாக சாத்தூர் நகருக்குள் வரும் வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

Similar News