செய்திகள்
விமானப்படை ஊழியரின் மனைவி தற்கொலை
விமானப்படை ஊழியரின் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த முத்தாபுதுப்பேட்டை பகுதியில் உள்ள இந்திய விமானப்படை குடியிருப்பில் வசித்து வருபவர் அஸ்வின்குமார் குப்தா. இவர், இந்திய விமானப்படையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜோதி குப்தா (வயது 35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்களது சொந்த ஊர் உத்தரப்பிரதேச மாநிலம் ஆகும்.
நேற்று காலை அஸ்வின்குமார் குப்தா நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் உள்ள மின்விசிறியில் தனது மனைவி ஜோதி குப்தா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோதி குப்தாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.