செய்திகள்
வண்டலூர் அருகே அரசு பள்ளியில் கலையரங்கம் திறப்பு
வண்டலூர் அருகே அரசு பள்ளியில் கலையரங்கம் திறப்பு விழாவுக்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஆராமுதன் தலைமை தாங்கினார்.
வண்டலூர்:
செங்கல்பட்டு மாவட்டம் காரணைப்புதுச்சேரி கிராமத்தில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் செங்கல்பட்டு தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.6 லட்சத்தில் புதிதாக கலையரங்கம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழாவுக்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் வி.எஸ். ஆராமுதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக வரலட்சுமி மதுசூதனன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தார்.
இதில் ஆப்பூர் மதுசூதனன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பத்மநாபன், டில்லிபாபு, பள்ளி தலைமை ஆசிரியர் சூரியகலா மற்றும் காரணைப்புதுச்சேரி ஊராட்சி தி.மு.க. கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.