செய்திகள்
புதுவை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புதுவை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை நெல்லித்தோப்பு நகராட்சி அலுவலக பின்புற பகுதியை சேர்ந்தவர் ஷேக்மொய்தீன். இவரது மகன் அன்வர் பாஷா (வயது 25). மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து வீட்டில் உள்ளவர்களுடன் அன்வர்பாஷா சண்டை போட்டு வந்துள்ளார்.
அதேபோல் நேற்று முன்தினமும் அவர் குடித்துவிட்டு வந்து தகராறு செய்தார். இதனால் அவரது தாய் மும்தாஜ் பேகம் கோட்டக்குப்பத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த அன்வர்பாஷா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.