சிங்கப்பெருமாள் கோவிலில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பறித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பெண்ணிடம் நூதன முறையில் ரூ.1¼ லட்சம் பறிப்பு
பதிவு: ஜனவரி 25, 2021 07:18
பணம் கொள்ளை
தாம்பரம்:
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 25). இவர், நேற்று முன்தினம் சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள ஒரு
வங்கியில் நகையை அடகு வைத்து ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வாங்கினார்.
பின்னர் அந்த பணத்தை பையில் வைத்துக்கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தனலட்சுமியிடம்
உங்கள் பணம் ரூ.500 கீழே விழுந்து விட்டது என்று கூறினர்.
உடனே அந்த பணத்தை தனலட்சுமி கீழே குனிந்து எடுக்க முயன்றார். அப்போது அவர் கையில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை மர்ம நபர்கள் பறித்துச்சென்று
விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி, இதுபற்றி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி
வருகின்றனர்.