செய்திகள்
விபத்து

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்து - 6 பெண் பக்தர்கள் பலி

Published On 2020-12-21 18:34 IST   |   Update On 2020-12-21 18:34:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை அருகே டிராக்டர் கவிழ்ந்து கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 6 பெண் பக்தர்கள் பலியானார்கள்.
கிருஷ்ணகிரி:

கர்நாடக மாநிலத்தில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு டிராக்டரில் பக்தர்கள் சென்றனர். அவர்கள் சென்ற டிராக்டர்  தேன்கனிக்கோட்டை அருகே மஞ்சுகொண்டபள்ளி என்ற இடத்தில் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. 

இதில் டிராக்டர் அடியில் சிக்கி 6 பெண் பக்தர்கள் பரிதாபமாக உயிர் இழந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News