செய்திகள்
ஆண்டிமடம் அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு
ஆண்டிமடம் அருகே கடையில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் கூவத்தூர் கடைவீதி பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்கப்படுகிறதா? என்று கடைகளில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சோமசுந்தரம்(வயது 45), அண்ணாமலை(56) ஆகியோருடைய கடைகளில் புகையிலை பொருட்கள் வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.