செய்திகள்
புகையிலை பொருட்கள் விற்ற 6 பேர் கைது
புகையிலை பொருட்களை விற்றது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
உடையார்பாளையம்:
உடையார்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் கடைவீதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தத்தனூர் மேலூரை சேர்ந்த நடராஜன்(வயது 50), சஞ்சய்(35), வடகடலைச் சேர்ந்த ஆதிமூலம்(55), வெண்மான்கொண்டான் கிராமத்தை சேர்ந்த வினோத்(31), உடையார்பாளையத்தை சேர்ந்த மருதமுத்து(50), சாமிநாதன்(48) ஆகியோர், அவர்களது பெட்டிக்கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்றது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து 6 பேரையும் கைது செய்து, புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.