செய்திகள்
கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்கள் வெட்டி அகற்றம்- போலீசார் விசாரணை

Published On 2020-12-16 14:12 IST   |   Update On 2020-12-16 14:12:00 IST
செந்துறை குற்றவியல் கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை சிவன் கோவில் பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் செந்துறை குற்றவியல் கோர்ட்டு இயங்கி வருகிறது. இந்த கோர்ட்டு முன்புள்ள சாலை ஓரங்களில் நிழல் தரும் புங்கை மரங்கள் இருந்தன. இந்த மரங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர் மரம் வெட்டும் எந்திரம் மூலம் வெட்டி அகற்றி விட்டனர்.

இந்த நிலையில் நேற்று கோர்ட்டுக்கு வந்த நீதிபதி மற்றும் வக்கீல்கள் மரங்கள் வெட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து வக்கீல் காரல்மார்க்ஸ் செந்துறை போலீசில் புகார் செய்தார். அதில், கோர்ட்டு முன்பு இருந்த 5 மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோர்ட்டு முன்பு இருந்த மரங்கள் வெட்டப்பட்டது செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News