செய்திகள்
விபத்து பலி

ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்துதவறி விழுந்த முதியவர் பலி

Published On 2020-12-02 14:15 IST   |   Update On 2020-12-02 14:15:00 IST
ஆலங்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் இருந்துதவறி விழுந்த முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள இ.டி.ரெட்டியபட்டி கிராமத்தில் வசித்து வந்தவர் வெங்குசாமி (வயது 68). இவர் இ.டி. ரெட்டியபட்டியிலிருந்து இரு சக்கர வாகனத்தில் சித்துராஜபுரம் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி அவர் இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆலங்குளம் சப்-இன்ஸ்பெக்டர் செண்பகவேலன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Similar News