செய்திகள்
தளவாய்புரம் அருகே செங்கல் தயாரிக்கும் சூளைகள் மூடப்பட்டிருக்கும் காட்சி.

தளவாய்புரம், சேத்தூர் பகுதியில் தொடர் மழையால் செங்கல் உற்பத்தி பாதிப்பு

Published On 2020-11-23 16:22 IST   |   Update On 2020-11-23 16:22:00 IST
தளவாய்புரம், சேத்தூர் பகுதியில் பெய்த தொடர்மழையால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தளவாய்புரம்:

தளவாய்புரம் அருகே உள்ள அயன்கொல்லன் கொண்டான், சொக்கநாதன்புத்தூர், சேத்தூர் ஆகிய பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட செங்கல் தயாரிக்கும் சூளைகள் உள்ளன. இந்த சூளைகளில் ஆண், பெண் என 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இங்கு தயாராகும் செங்கல்கள் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், கோவில்பட்டி, சிவகாசி, புளியங்குடி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்தநிலையில் இந்த பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழையினால் செங்கல் தயாரிக்கும் பணி தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 தினங்களாக லேசான வெயில் அடித்தாலும் செங்கல்களை தயாரிக்க முடியாமலும், தயாரித்த செங்கல்களை காய வைக்க முடியாத நிலையும் நிலவுகிறது.

இதனால் கடந்த 2 வாரங்களாக செங்கல் சூளைகள் சரிவர செயல்படவில்லை. ஆதலால் செங்கல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழையினால் செங்கல் தயாரிக்க முடியாததால் தொழிலாளர்களும், உற்பத்தியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

எனவே அரசு எங்களுக்கு போதிய அளவு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News