செய்திகள்
கொரோனா வைரஸ்

கொரோனா பரிசோதனை முகாம்

Published On 2020-09-06 12:46 IST   |   Update On 2020-09-06 12:46:00 IST
ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டி, மேலராஜகுலராமன், சமுசிகாபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது.
ஆலங்குளம்:

ஆலங்குளம் அருகே உள்ள சத்திரப்பட்டி, மேலராஜகுலராமன், சமுசிகாபுரம் ஆகிய ஊராட்சியில் உள்ள கிராம பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை முகாம் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார மையத்தில் நடைபெற்றது. மருத்துவர்கள் பாலசுப்பிரமணியன், அண்ணாமலை ஆகியோர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்தனர். 300 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

ஊராட்சி தலைவர்கள் சத்திரப்பட்டி கனகா மாரிமுத்து, மேலராஜகுலராமன் விவேகானந்தன், சமுசிகாபுரம் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாட்டை சுகாதார ஆய்வாளர் ஹரிஹரன் சுகன்ராஜ் செய்திருந்தார்.

Similar News