செய்திகள்
கோகுலகிருஷ்ணன் எம்பி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

குணமடைவோர் எண்ணிக்கை அதிகரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது- கோகுலகிருஷ்ணன் எம்பி பேட்டி

Published On 2020-07-22 11:55 IST   |   Update On 2020-07-22 11:55:00 IST
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கோகுலகிருஷ்ணன் எம்.பி. கூறினார்.
காரைக்கால்:

காரைக்கால் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகள் குறித்து கோகுலகிருஷ்ணன் எம்.பி. நேற்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், கலெக்டர் அர்ஜூன் சர்மா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்குமார் பன்வால், துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குனர் மோகன்ராஜ் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தின் முடிவில் கோகுலகிருஷ்ணன் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

காரைக்கால் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் திருப்தி அளிக்கிறது. மாவட்டத்தில் இதுவரை 135 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். 83 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். அந்த வகையில் குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக, மாவட்ட நிர்வாகத்தையும், நலவழித்துறை, போலீசார் மற்றும் அரசு துறை அதிகாரிகளையும் பாராட்டுகிறேன். காரைக்கால் அரசு பொது மருத்துவமனைக்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வெண்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாங்க நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News