செய்திகள்
புதுச்சேரி சட்டசபை

மின்துறை தனியார்மயம் - மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் நாளை தீர்மானம்

Published On 2020-07-21 16:48 GMT   |   Update On 2020-07-21 16:48 GMT
மின்துறை தனியார்மயமாக்கும் மத்திய அரசு முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் நாளை தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது
புதுவை மின்துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்து அறிவிப்பு வெளியிட்டது. இதனை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.

புதுவையில் மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மின் வினியோகத்தை தனியார் மயமாக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என போராட்டக்குழுவின் நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

இந்நிலையில்  புதுச்சேரி மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப் பெறக்கோரி நாளை தீர்மானம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுத்தொடர்பாக மத்திய அரசு மின்துறையை தனியார் மயமாக்கும் அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என புதுச்சேரி பேரவையில் நாளை  தீர்மானம் கொண்டுவரப்படுகிறது. 
Tags:    

Similar News