செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு டாக்டர் உள்பட 2 பேர் பலி - 107 பேருக்கு தொற்று

Published On 2020-07-07 07:01 GMT   |   Update On 2020-07-07 07:01 GMT
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு டாக்டர் உள்பட 2 பேர் பலியாகி உள்ளனர். 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்:

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 23,708 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 1,068 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது. 3,601 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. 385 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 12 சிறப்பு தனிமைப்படுத்தும் மையங்களில் 455 பேர் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று விருதுநகர், சிவகாசி மற்றும் கிராமப்பகுதிகளில் 107 பேருக்கு கொரோனா தொற்று உறுதி ஆகி உள்ளது. இதில் 40 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் நெல்லை அரசு ஆஸ்பத்திரி பரிசோதனை மையத்தில் இருந்து வெளியிடப்பட்டது. விருதுநகர் பாண்டியன்நகரை சேர்ந்த 32 வயது பெண், கூனம்பட்டியை சேர்ந்த 50 வயது நபர், சிவகாசியை சேர்ந்த 31, 42 வயது பெண்கள், 48 வயது நபர், ஆனைக்குட்டத்தை சேர்ந்த 24 வயது நபர், சாட்சியாபுரத்தை சேர்ந்த 8 வயது சிறுமி, விஸ்வநத்தத்தை சேர்ந்த 44 வயது, 31 வயது, 40 வயது, 22 வயது பெண்கள், 70, 60 வயது மூதாட்டிகள், பள்ளபட்டியை சேர்ந்த 59 வயது நபர், நாராணபுரத்தை சேர்ந்த 40,44 வயது நபர்கள் மற்றும் சிவகாசியை சுற்றியுள்ள கிராமப்பகுதியை சேர்ந்தவர்கள், அல்லம்பட்டி, முத்துராமன்பட்டி பகுதிகளை சேர்ந்த 18 பேர், விருதுநகர் கிழக்கு பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த 30 பேர் உள்பட 107 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் பெரியகருப்பண் தெருவை சேர்ந்த 60 வயது கூரியர் நிறுவன முகவர் கொரோனா சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார்.

இதேபோல சிவகாசியை சேர்ந்த பிரபல குழந்தைகள் சிகிச்சை மருத்துவர் கொரோனா பாதிப்பால் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இதன் மூலம் இந்த மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம் விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,175 ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News