செய்திகள்
முககவசம்

முககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம்

Published On 2020-07-03 12:23 GMT   |   Update On 2020-07-03 12:23 GMT
பெருந்துறையில் கடந்த 3 நாட்களில் முககவசம் அணியாத 72 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
பெருந்துறை:

பெருந்துறை பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார், குன்னத்தூர் ரோட்டில் செல்லாண்டியம்மன் கோவில் எதிரே, நேற்று மாலை கொரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அப்போது அந்த வழியாக நடந்து மற்றும் வாகனங்களில் முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு தலா ரூ.50 அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் காரில் ஒரு பெண் முககவசம் அணியாமல் வந்துள்ளார். அவரை தடுத்து நிறுத்திய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பத்மாவதி, முககவசம் அணியாமல் வந்ததற்கு ரூ.50 அபராதம் கட்டுங்கள் என்று கூறினார். அதற்கு அந்த பெண், தனியாக கார் ஓட்டி வருபவர்கள் முககவசம் அணிய தேவையில்லை என்று போலீசாரிடம் கூறினார். இதனால் அவருக்கும், போலீஸ்காரருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த பெண் அங்கிருந்து வேகமாக சென்றுவிடார். அந்த பெண் வந்த கார் பதிவு எண்ணை குறித்துக்கொண்ட போலீசார் அவரை கண்டுபிடித்து அவர் மீது நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்தனர்.

பெருந்துறையில் நேற்று மற்றும் கடந்த 2 நாட்களில் நடந்த வாகன சோதனையில் முககவசம் அணியாமல் வந்த 72 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து அபராத தொகையாக மொத்தம் ரூ.3 ஆயிரத்து 600 வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News